அன்புள்ள பெற்றோர்களுக்கு,
கோடையில் சிறுவர்கள் மனம் மகிழ, தமிழோடு விளையாடு என்ற பெயரில் கோடை முகாம் நடத்தத் திட்டமிட்டு இருக்கிறோம். கூகிள் மீட் வழியாக இந்தக் கோடை முகாம் வாரம், இருமுறை நிகழ்வாக ஜூலை 8 ஆம் தேதி முதல் திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் மாலை 3.30 மணி முதல் 4.30 மணி வரை நடைபெறும்.
மாணவர்கள் இங்கு, தங்களின் கதை, விடுகதை, நகைச்சுவை, விளையாட்டு, ஓவியம், கைவினைப் பொருள் செய்தல், நூல் விமர்சனம், இலக்கியம் போன்ற தமிழ் மற்றும் பண்பாடு சார்ந்த திறமைகளைப் பகிர்ந்து கொள்ளலாம். அனைவரும் கலந்து கொண்டு இன்புற ஊக்குவிக்கிறோம்.
மேலும் விவரங்களுக்கு, தமிழோடு விளையாடு புலனக் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.